மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

கங்கனா குழப்பங்கள்: ஹ்ரித்திக் ரோஷன் ஓப்பன் டாக்!

கங்கனா குழப்பங்கள்: ஹ்ரித்திக் ரோஷன் ஓப்பன் டாக்!

கங்கனா ரனாவத் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுக்கிடையேயான சர்ச்சை தற்போது புது உருவம் பெற்றிருக்கிறது. 2014 மே மாதம் தொடங்கிய இவர்களது சர்ச்சை, இரண்டு வருடங்களாக நீள்வதற்குக் காரணம் ஹ்ரித்திக் ரோஷன் பேசாமல் இருந்தது மட்டுமே. ஷேர்-இட் மூலம் பகிர்ந்துகொள்ளா அனுப்புநர் மட்டும் இருந்தால் போதாது. ரிசீவரும் வேண்டுமல்லவா? அப்படிப்பட்ட ரிசீவராக இப்போது மாறியிருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன்.

கங்கனா தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்:

கங்கனாவின் இ-மெயில் அக்கவுன்ட்டை ஹேக் செய்தது ஹ்ரித்திக் ரோஷன் என்பது மட்டும்தான். இதிலிருந்து சுற்றிச் சுற்றி இ-மெயிலை ஹேக் செய்யவில்லையென்றால் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. அந்த மெயில்களை ஏன் டெலிட் செய்யவில்லை. அந்த மெயில் ஐடியை ஏன் பிளாக் செய்யவில்லை. கங்கனாவை பழி வாங்குவதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. முன்னாள் காதலியான கங்கனாவை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதால் இப்படி அவரே ஹேக் செய்தார் ஆகியவை தான். கிட்டத்தட்ட 2 வருடங்களாக செல்லுமிடமெல்லாம் கங்கனா இதைப் பேசிவருகிறார். ஆனால், ஹ்ரித்திக் சென்ற வருடம்தான் வழக்குப் பதிவு செய்தார். இந்த வருடம் பிரச்னை குறித்து ரிபப்ளிக் டிவி-க்கு பேட்டியளித்தபோது முதன்முறையாகப் பேசியிருக்கிறார். என்ன பேசினார்? ஏன் இத்தனை நாள்கள் பேசவில்லை?

யாரிடமும் இதுகுறித்து பேச வேண்டாம் என்று நான் அறிவிறுத்தப்பட்டிருந்தேன். நான் யாரிடமாவது சாதாரணமாகப் பேசும் ஒரு வார்த்தை தவறாகக் கருதப்படலாம் என நினைத்தேன். ஆனால், இப்போது நான் பேசியாக வேண்டும். கைட்ஸ் படத்துக்காக 2008 அல்லது 2009இல் கங்கனாவை முதலில் சந்தித்தேன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். சினிமாவைத் தாண்டி நாங்கள் பகிர்ந்துகொள்வது மொழி மட்டும்தான். அவருடைய மொழியில் கங்கனாவுக்கு அத்தனை ஆர்வமில்லை. நானும் அதே மாதிரி என்பதால் அது தொடர்ந்ததே தவிர, அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. கிரிஷ் 3 படத்தில் நடிக்கும்போது படத்துக்கு தேவைப்பட்ட நெருக்கம் அவருக்குள் தவறான எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம் என நினைக்கிறேன். அதன்பிறகு தான் அவரது பயிற்சி செய்யும் படங்களை எனக்கு கங்கனா அனுப்பத் தொடங்கினார். நான் சில டிப்ஸுகளைத் தருவேன். அவ்வளவு தான். ஆனால், அவரது இயல்பில் மாற்றம் தெரிந்தது கிரிஷ் 3 ஷூட்டிங் ஜோர்டானில் முடிவடைந்தபோது நாங்கள் கொண்டாடிய பார்ட்டியில் தான்.

என்னை அணுகி இந்தப் படத்தைத் தாண்டியும் வாழ்க்கையைத் தொடர்வோம் என அவர் கேட்டார். நான் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு என் அறைக்குச் சென்றுவிட்டேன். ஆனால், இரவு என்னுடைய அறைக்கு வந்து கதவை உடைப்பது போல தட்டினார். நான் அசிஸ்டண்டுகளிடம் சொல்லி அவரை அப்புறப்படுத்தினேன். மறுநாள் காலை கங்கனாவின் தங்கை ரங்கீலா இரவு நடந்ததற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். அத்துடன் நான் கங்கனாவுடன் சரியாகப் பழகவில்லை. மீதி ஷூட்டிங்கின்போது கூட முடிந்தவரையில் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகு தனியாக அவரை நான் சந்தித்ததே கிடையாது. இப்போது கூட இதைப்பற்றி பேசியிருக்க மாட்டேன். ஆனால், நான் பாரீசில் அவரிடம் காதலை வெளிப்படுத்தியதாக சொல்லும் அளவுக்கு இறங்கிவிட்டதால் இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று பேச வேண்டியதாகிவிட்டது.

சரியாக மே 24 2014 முதல் எனக்கு மோசமான இ-மெயில்கள் இந்தியில் வரத் தொடங்கின. அப்போது நான் ரியாக்ட் செய்யாததற்குக் காரணம், யாரோ கங்கனாவின் அக்கவுன்ட்டை ஹேக் செய்திருக்க வேண்டும் என நம்பினேன். அவர் அப்படிப் பேசுகிறவர் இல்லை என எனக்குத் தெரியும். ஆனால், அடுத்த நாள் ரங்கோலி, நான் அவரது அக்கா கங்கனாவின் மெயில் அக்கவுன்ட்டை ஹேக் செய்ததாக மெயில் அனுப்பினார். எனக்கு [email protected] என்ற மெயில் அக்கவுன்ட் இல்லை. பிறகு, கங்கனா தரப்பிலிருந்து பேசி ஹேக் செய்தவரைப் பிடிக்க சைபர் செல் பிரிவில் புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார்கள். நான் சரியென்று அமைதியாக இருந்துவிட்டேன். அதுவரையிலும் இது என் பிரச்னையாக மாறவில்லை. அனால், போகப்போக இது அதிகரித்தது என் மனது பாதிக்கும் வகையில் பல மெயில்கள் வரத் தொடங்கின. கங்கனாவும் மிகப்பெரிய நட்சத்திரம் என்பதால் எனக்கு இதில் தலையிட பயமாக இருந்தது. எனவே அவர்களாக இதுகுறித்து செயல்படும் வரைக் காத்திருந்தேன். அப்போதுதான் ரங்கோலி இரு தரப்பும் இதை இப்போதே முடிக்கலாம் என்று கேட்டார். ஆனால், அதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

எனக்கு பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நான் அடுத்து என் மகன்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எந்தப் பெண்ணை இழிவுபடுத்தினாலும் அது தாயை இழிவுபடுத்துவதற்கு சமம். அதனால்தான் தொடர்ந்து எனக்கு பிரச்னைகளைக் கொடுத்தபோதும் நான் ரியாக்ட் செய்யவில்லை. பலமுறை எனக்கு போன்கள் வந்தன. ஆனால், நல்ல வேளையாக நான் எடுக்கவில்லை. இல்லையென்றால், என்னைக் கோபப்படுத்தி அப்போது வரும் வார்த்தைகளை வைத்து என்னை சிக்க வைத்திருப்பார்கள். இப்போது என்னிடம் நான் நிரபராதி என நிரூபிக்க ஆதாரம் இருக்கிறது. தினமும் பத்து முதல் பதினைந்து இ-,மெயில்கள் வரும். நாட்டின் பல்வேறு இடங்களில் சந்திக்கலாம் என அழைப்பு வரும். இவற்றை பிளாக் செய்வதற்கான வசதி என் ஃபேஸ்புக்கில் இல்லை.

கிட்டத்தட்ட 3000 தனிப்பட்ட படங்களும், வீடியோக்களும் எனக்கு அனுப்பப்பட்டன. ஆனால், நான் எதற்கும் பதிலளிக்கவில்லை. நான் பதிலளித்தால் என் அக்கவுன்ட்டையும் ஹேக் செய்துவிடுவார்களோ என பயந்தேன். பிறகு என் மெயிலிலிருந்தே எதையாவது அனுப்பி என்னை சிக்கவைக்கும் வாய்ப்பு அதிகம் இருந்ததால், அப்படி செய்யவில்லை. கங்கனாவின் மெயிலை ஹேக் செய்திருந்தால் நானே எல்லா போட்டோக்களையும் எடுத்திருக்க மாட்டேனா. எதற்காக என் மெயிலுக்கு அனுப்ப வேண்டும். அப்படி யாராவது ஹேக் செய்திருந்தாலும்கூட வெளி உலகத்துக்கு அனுப்பாமல் எனக்கு மட்டும் ஏன் அனுப்ப வேண்டும். நான் ஒருவேளை இப்படி நடைபெறுகிறதென மீடியாவுக்கு சென்றிருந்தால் என்னை மொத்தமாக முடித்திருப்பார்கள். அதனால்தான் நான் எவ்விதத்திலும் கங்கனாவுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. கங்கனாவிடம் பேச விரும்பவில்லை என்பதையே ரங்கோலியிடம் தான் சொன்னேன். எனக்கு இந்தப் பிரச்னை முக்கியமானதாக தோன்றாததால் தான் இரண்டு வருடங்கள் பொறுத்திருந்தேன். எல்லை மீறியதால் வழக்கு பதிவு செய்தேன். எனக்கு இருக்கும் சொந்தப் பிரச்னைகளே போதும் என என்னை நான் இதிலிருந்து தற்காத்துக்கொண்டது தான் இத்தனைப் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon