மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

சீன எல்லையை ஆய்வு செய்த நிர்மலா!

சீன எல்லையை ஆய்வு செய்த நிர்மலா!

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண்ணான நிர்மலா சீதாராமன் நேற்று (அக்டோபர் 7) சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையான டோக்லாம் பகுதியில் வான் வழியாக பார்வையிட்டார்.

ராணுவ அமைச்சரான பிறகு எல்லை பிரச்னை உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்து வரும் நிர்மலா, அண்மையில் காஷ்மீருக்குச் சென்றார். இந்த நிலையில் நேற்று ஒருநாள் பயணமாக அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.

சனிக்கிழமை பிற்பகல் சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் சமீபத்தில் மிகுந்த பதற்றத்துக்குள்ளான டோக்லா - நாதுலா எல்லைப் பகுதியைப் பார்வையிட்டார். சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் சீன எல்லை பகுதிகளில் இருக்கும் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன், வரும் நவம்பர் மாதம் கிழக்கு சிக்கிம் பகுதியில் தொடங்கப்பட இருக்கும் விமான நிலையம் பற்றியும் தனது பயணத்தின்போது அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

சிக்கிம் பயணத்தை முடித்த நிர்மலா சீதாராமன், இதுபற்றி விரைவில் பிரதமர் மோடிக்கு அறிக்கை ஒன்றை அளிப்பார் என்று தெரிகிறது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதராமன் சிக்கிம் எல்லைப் பகுதியைப் பார்வையிட்டது பற்றி சீன அரசும் விசாரித்து தனது எல்லைப் புற அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon