மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சீன ஓப்பன்: இறுதிப் போட்டியில் நடால்!

சீன ஓப்பன்: இறுதிப் போட்டியில் நடால்!

சீன ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ரஃபெல் நடால் முன்னேறினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி, அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது.

பீஜிங்கில் நடைபெற்று வரும் சீன ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று (அக்டோபர் 7) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் - பல்கேரியாவின் டிமிட்ரோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியின் முதல் செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றை டிமிட்ரோவ் 6-4 எனக் கைப்பற்ற, ஆட்டம் சமநிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை நடால், 6-1 என எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - பெங் (சீனா) ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்ஸ் - யங் ஜன் (தைவான்) ஜோடியை எதிர்கொண்டது. முதல் சுற்றை சானியா ஜோடி 6-2 எனக் கைப்பற்றியது. இரண்டாவது சுற்றை ஹிங்கிஸ் ஜோடி 6-1 எனக் கைப்பற்ற ஆட்டம் ‘டை-பிரேக்கர்’ வரை சென்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹிங்கிஸ் ஜோடி, டை-பிரேக்கரை 10-5 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon