மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கூந்தல் அழகுக்குக் குட்டி குட்டி டிப்ஸ் - பியூட்டி ப்ரியா 08

கூந்தல் அழகுக்குக் குட்டி குட்டி டிப்ஸ் - பியூட்டி ப்ரியா 08

சன்னலோரத் தென்றலில்

சின்னதாய் அசையும்

உன் கூந்தல் கண்டு

மெல்லிய கொடியிலாடும்

மலர்ந்த மல்லிகைக்கும்

உன் கூந்தலேறி

ஊஞ்சல் ஆட

ஆசை!

என்று உங்கள் கூந்தலைப் பார்த்து கவிதையை அள்ளிக்கொட்ட வேண்டுமா கவிஞர்கள்.

இயற்கையே நம் தலை ஆயிலைச் சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையைச் சுத்தமாக வைத்திருக்கும். இதற்கு ஷாம்பூ போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பூ அந்த ஆயிலை தலையிலிருந்து அகற்றிவிடுகிறது. ஆனால், அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

1) தண்ணீர்: தலையில் நீரைவிட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.

2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து கொள்ளுங்கள். இதை தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும்தான் இதை பயன்படுத்த வேண்டும். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்பூவும் அளிக்க முடியாது.

கண்டிஷனர் வேண்டுமா?

எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள் அல்லது லெமன் ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனராகப் பயன்படுத்துங்கள். இப்படி வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

பல் ஒன்று பழுதானால்

பல நோய்கள் உடலுக்கே

ஆதலினால் பல்லுக்கு

பாதகங்கள் வராமல்

காதலுடன் காத்திடுவோம்!

பத்திரமாய் பாதுகாப்போம்!

ஆம்... அதே தான். நாளை உங்கள் பற்களைப் பளபளக்க வைக்க வருகிறாள் பியூட்டி ப்ரியா!

பியூட்டி ப்ரியா 01

பியூட்டி ப்ரியா 02

பியூட்டி ப்ரியா 03

பியூட்டி ப்ரியா 04

பியூட்டி ப்ரியா 05

பியூட்டி ப்ரியா 06

பியூட்டி ப்ரியா 07

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon