மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கேரளா: புதிய திட கழிவு மேலாண்மை திட்டம்!

கேரளா: புதிய திட கழிவு மேலாண்மை திட்டம்!

கேரளா புதிய திட கழிவு மேலாண்மை அமைப்பின் உதவியுடன் அதன் நிலப்பகுதிகளை மூடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது அதற்கான பணிகள் திருவனந்தபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரிம கழிவுகளைப் பிரித்தெடுப்பதைத் தவிர, அவற்றை கம்போஸ்டிங் (கம்போஸ்டிங் என்பது கழிவு பொருள்களை (மாட்டு சாணம், வீட்டில் தேவையற்ற குப்பைகள், சாக்கடை கழிவுகள்) நிலப்பள்ளத்தில் மக்க வைப்பது) செய்யச் சரியான இடத்தைப் திருவனந்தபுர மாநகராட்சி பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கான கம்போஸ்டிங் வசதிகள் தொழில்நுட்ப உதவியுடன் குடியிருப்பாளர்களின் இல்லங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அமைக்க, மாநகராட்சி அவர்களிடமிருந்து ஆரம்ப கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறது.

திருவனந்தபுரத்தில் 100 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 2,500 முதல் 3,000 குடும்பங்கள் உள்ளன. கம்போஸ்டிங் செய்பவர்களுக்கு உள்ளூர் சேவை வழங்குநர்கள் மூன்றடுக்குத் தொட்டி மற்றும் 30 லிட்டர் கோகோ பீட் (தென்னை நார் கழிவு) வழங்குவார்கள். பசுமை தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்தால், அவர்கள் தொழில்நுட்ப உதவி வழங்குவார்கள். குடியிருப்பாளருக்குத் தேவைப்படாவிட்டால் உர தொட்டியையும் அகற்றி விடுவார்கள். சேவை வழங்குநர்கள் வீடுகளில் இருந்து மக்காத கழிவுகளை மட்டுமே சேகரிப்பார்கள். இதற்கு மாதாந்திர சேவைக் கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படும் என திட கழிவு மேலாண்மை, ஜீரோ கழிவு அமைப்புகள், அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் தணல் இயக்குநர் கே.என்.,ஷிபு தெரிவித்துள்ளார்.

மறுசுழற்சி பொருள்களை நியமிக்கப்பட்ட இடங்களில் போட வேண்டும். குறைந்த மதிப்பு கழிவுகளை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீட்பு வசதிகள் கொண்ட இடங்களில் போட வேண்டும்,

மாநில அரசாங்கத்தால் பசுமை நெறிமுறை என்றிழைக்கப்படும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. அதன்மூலம் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளைத் தவிர்க்க மக்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். ஓணம் பண்டிகையின்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது சுமார் 25 லட்சம் பேர் அந்த இடத்திலேயே கூடினார்கள். அப்போதே பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதாவது, மாணவ தன்னார்வலர்கள் நுழைவு கூடத்தில் நின்றுகொண்டு, மக்களிடம் இருந்த அனைத்து பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அதை பத்திரமாக வைத்துக்கொண்டனர். அதற்கு 10 ரூபாயைக் கட்டணமாக வசூலித்தனர். மீண்டும் மக்கள் வெளியேறும்போது அவர்களிடம் கட்டணத்தை திருப்பிச் செலுத்தி விட்டனர். மேலும், மக்கள் உணவு சாப்பிடுவதற்கு தெர்மோகோல் தட்டுகளுக்குப் பதிலாக அஸ்கா நட் இலை தட்டுகள் வழங்கப்பட்டன. அந்தத் தட்டுகளுக்கு 1 ரூபாய்க்கு வசூலிக்கப்பட்டன என என்ஜிஓ பசுமை கிராமத்தின் நிர்வாக இயக்குநர் சுஜாதன் சிவதாசன் கூறியுள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon