மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

தென்மேற்குப் பருவமழை 5% குறைவு!

தென்மேற்குப் பருவமழை 5% குறைவு!

வழக்கமாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 5 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது. மழைப்பொழிவு நாடு முழுவதும் ஒரே சீராக இல்லை. சில இடங்களில் மிக அதிகமாகவும், சில இடங்களில் மிகக் குறைவாகவும் பெய்துள்ளது. இதன் காரணமாக காரிஃப் பயிர் விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காரிஃப் பருவத்தை விட இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் மற்றும் உணவு தானியங்கள் விதைப்பு குறைந்துள்ளது.

மத்திய அரசின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி நடப்பு காரிஃப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 2.8 சதவிகிதமும், எண்ணெய் வித்துகள் 8 சதவிகிதமும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பயிர் விதைப்பு சரிந்ததற்கு மழைப்பொழிவு குறைந்தது மட்டுமே காரணமென்று கூற முடியாது. கடந்த மூன்று மாதங்களாக உற்பத்திப் பொருள்களுக்கான விலைகள், வேளாண் வருவாய் விவசாயிகளுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விலை வீழ்ச்சியால் குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட பெறமுடியாத சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். எனவே விலை வீழ்ச்சி, பருவமழைத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் பயிர் விதைப்பு சரிந்துள்ளது.

தமிழ்நாடு கடந்த பத்தாண்டுகளில் 10 சதவிகிதம் குறைவான அளவிலேயே தென்மேற்கு பருவமழையைப் பதிவு செய்துள்ளது. இந்தப் பருவத்தில் மத்திய அரசின் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, அரிசி 94.48 மில்லியன் டன்னும், பருப்பு 8.71 மில்லியன் டன்னும், எண்ணெய் வித்துகள் 20.67 மில்லியன் டன்னும், பருத்தி 32.27 மில்லியன் டன் பேல்களும், கரும்பு 335.7 மில்லியன் டன்னும் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon