மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 17 ஜன 2021

உங்கள் கைகளில் டெங்குவுக்கு மருந்து - கிச்சன் கீர்த்தனா 08

உங்கள் கைகளில் டெங்குவுக்கு மருந்து -  கிச்சன் கீர்த்தனா 08

“யாரு கீர்த்தனா, அந்த நிலவேம்பு கஷாயம்? எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கே” என பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க... இதோ,

நிலவேம்பு கசாயம்

தேவையானவை:

*1 - நிலவேம்பு பொடி - 1 தேக்கரண்டி

*2 - பற்படாகம் - அரை தேக்கரண்டி

*3 - விஷ்ணுகிரந்தை - அரை தேக்கரண்டி

*4 - பூண்டு - 2 பல்

*5 - சுக்கு - சிறிய துண்டு (தேவைக்கேற்ப)

*6 - மிளகு - அரை தேக்கரண்டி

*7 - திப்பிலி - 3

இவை அனைத்தையும் 250 எம்.எல் நீரில் கொதிக்கவைத்து 100 எம்.எல் ஆன பிறகு வடித்து காலை, மாலை குடித்து வரவும்.

இதனுடன் பப்பாளி இலை சாறு 2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

பிளாட்லெட்ஸ் அதிசயிக்கும் வண்ணம் அதிகரிக்கும்.

காய்ச்சல் வந்தால் அது என்ன காய்ச்சலாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். காய்ச்சல் ரகத்துக்கு ஏற்ப மூன்று வேளைகளில் இருந்து 14 வேளைகளுக்குள் பூரண குணமாகிவிடும். காலை, மாலை குறைந்தது ஒரு வாரம் சாப்பிடவும். கொசுக்கடி, விஷக்கடி, குடல் கிருமிகள், சர்க்கரை நோய், அறுசுவைகளில் கசப்பு சுவை குறைபாட்டால் உண்டாகும் சகல வியாதிகளும் குணமாகும்.

டாக்டர் ஃபீஸ் இன்றி, மருந்து மாத்திரை செலவு, ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், பரிசோதனைச்செலவுகள், காத்திருக்கும் நேர இழப்பு இன்றி இனிதே வாழ்க.

கீர்த்தனா பாலிடிக்ஸ்

டெங்குவை

தாமரை இலையோ

இரட்டை இலையோ

தடுக்காது

பப்பாளி இலை தான் தடுக்கும்.

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

கிச்சன் கீர்த்தனா 06

கிச்சன் கீர்த்தனா 07

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon