மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

பிக் பாஸ்: சூர்யா - அரவிந்த் சாமி இல்லை!

பிக் பாஸ்: சூர்யா - அரவிந்த் சாமி இல்லை!

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பதிப்பு முடிவடைந்துவிட்டது. நூறு நாள்களாக பிக் பாஸ் பார்ப்பதற்காகத் தங்களது வேலை நேரத்தையெல்லாம் மாற்றிவைத்த ரசிகர்களால் இப்போது பிக் பாஸ் இல்லாத வீடு, மாமியார் - மருமகள் சண்டையில்லாத வீடு போல ஆகிவிட்டது.

அடுத்த சீசன் ஜனவரியில் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகும் வேளையில் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி குளிர்காய வதந்திகளையும் சிலர் பரப்பி வருகின்றனர். அதில் முதலில் சிக்கியிருப்பவர்கள் சூர்யா மற்றும் அரவிந்த் சாமி.

சூர்யா - அரவிந்த் சாமி ஆகிய இருவரையும் இத்தனை சீக்கிரத்தில் வதந்தி பரப்ப பயன்படுத்தியதற்குக் காரணம், அவர்கள் ஏற்கனவே விஜய் டிவியுடன் தொடர்புடையவர்கள் என்பதாலும் சுலபமாக அக்ரிமெண்ட் முடிந்துவிடும் என்பதாலும்தான். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களின் சுயமும் வெளிப்படும் என்பது புரிந்திருக்கும். அப்படி வெளிப்பட்ட கமல்ஹாசனின் சுயத்தைச் சீண்டிப் பார்த்ததும் இன்று அவர் அரசியல் கட்சி வரை வருவதற்கான காரணமாக அமைந்தது. விஷயம் இதுவல்ல.

கமல்ஹாசனைப் போலவே விஜய் டிவிக்குத் தொடர்பில்லாத, ஆளுமைத் திறன் அதிகம்கொண்ட ஒரு தொகுப்பாளரைத்தான் பிக் பாஸ் இரண்டாவது சீசனுக்குக் கொண்டுவர முயற்சி செய்வதாக பிக் பாஸ் 2 டீமில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். அந்த லிஸ்ட்டில் சூர்யா - அரவிந்த் சாமி ஆகிய இருவரும் இல்லை என்பதை உறுதியாக சொன்னாலும், அடுத்து இருப்பவர்கள் யார் என்பதை சொல்ல மறுத்துவிட்டார்கள்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon