மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்!

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்!

தபால் நிலையங்கள் மற்றும் பொது சேமலாப நிதியங்களில் சேமிக்கப்படும், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மத்திய நிதியமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

இதுகுறித்து கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ், பி.பி.எஃப். மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நிதியமைச்சகம் அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில், “சேமிப்பாளர்களுடைய ஆதார் விவரத்தையும் இனி விண்ணப்பப் படிவத்தில் இணைக்க வேண்டும். இதற்கு முன்னர் இணைக்காமல் இருப்பவர்களின் ஆதார் விவரங்களையும் இணைக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

எல்லா கணக்குகளுக்கும் ஆதார் எண்ணை இணைக்க இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் இறுதி நாளாகும். இதன்மூலம் 12 இலக்க ஒருங்கிணைந்த அடையாள எண் சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்படும். வரி ஏய்ப்பாளர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.

முன்னதாக ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகள் மற்றும் பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய அரசு கூறியது. உச்ச நீதிமன்றம் ஆதார் எண்ணை எந்தத் திட்டத்துடனும் கட்டாயமாக இணைக்கக் கூடாது என்று பலமுறை எச்சரித்தபோதிலும் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தாமல் எல்லா திட்டங்களுடனும் இணைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon