மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் அனுபமா!

தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் அனுபமா!

‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் ‘கொடி’ திரைப்படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தொடர்ந்து தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கில் கவனம் செலுத்திவரும் அவர், கிட்டத்தட்ட ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ராம் போத்தினினுடன் ‘உன்னடி ஒக்கடே ஜிந்தகி' படத்தில் நடித்துவரும் அவர், இந்தப் படத்துக்காகச் சொந்தக் குரலில் வசனம் பேச தெலுங்கு மொழியைக் கற்று, டப்பிங் பேசி உள்ளார். இந்தப் படத்தின் ‘வாட் அம்மா வாட் இஸ் திஸ் அம்மா’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காதல் கதையாக உருவாகிவரும் இந்தப் படம் அக்டோபர் 27ஆம் தேதி வெளிவர உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஆயுஸ்மான் பவ, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், வேட்டகாடு, நாக சைதன்யா - மாதவன் இணைந்து நடிக்கும் சௌயாஷி மற்றும் கருணாகரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் என தெலுங்கில் தொடர்ச்சியாகப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி, தெலுங்கு சினிமாவுலகில் நடிப்பதுடன் அம்மொழியைக் கற்று டப்பிங் பேசி தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது விஜய் இயக்கத்தில் கரு, தனுஷுடன் மாரி 2 ஆகிய படங்களின் நாயகியாகியுள்ளதால் தெலுங்கு திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் தெலுங்கு சினிமா உலகில் பல படங்களைக் கைப்பற்றி இருக்கிறார் அனுபமா.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon