மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

முதல்வருக்குப் போட்டியாக செங்கோட்டையன்!

முதல்வருக்குப் போட்டியாக செங்கோட்டையன்!

கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “கோபி செட்டிபாளையத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐ.டி. பார்க் அமைக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், 32 மாவட்டங்களிலும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும். அதற்காக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துவரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அவருடைய சொந்த தொகுதியிலும், பல்வேறு இடங்களிலும், வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐ.டி. பார்க், இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் ஆகியவற்றைத் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon