மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஏற்றுமதியை மேம்படுத்த புதிய திட்டம்!

ஏற்றுமதியை மேம்படுத்த புதிய திட்டம்!

ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை உருவாக்க மத்திய வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதியன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஏற்றுமதியாளர்களுக்கு வர வேண்டிய ரீஃபண்ட் தொகை கிடைக்க தாமதமானதால், அவர்களுக்கான மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்பிரச்னை குறித்து வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூலை மாதத்துக்கான ரீஃபண்ட் தொகையை அக்டோபர் 10ஆம் தேதி முதலும், ஆகஸ்ட் மாதத்துக்கான ரீஃபண்ட் தொகையை அக்டோபர் 18ஆம் தேதி முதலும் வழங்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்தது. மேலும் இதற்காக பிரத்யேகமாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்றுமதியாளர்களின் பிரச்னை சரி செய்யப்பட்டதால், ஏற்றுமதிக்காகப் புதிய யுக்தி ஒன்றை உருவாக்க மத்திய வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி 20 சதவிகித பங்கு வகிக்கிறது. ஏற்றுமதியைக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்த வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. ஏற்றுமதி புரமோஷன் கவுன்சில்களுடன் சுமார் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, ஏற்றுமதியை மேம்படுத்த ஒரு செயல்திட்டத்தை உருவாக்குமாறு அவர்களை வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon