மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்!

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று (அக்டோபர் 8) நடைபெறுகிறது.

தகுதிவாய்ந்த புதிய, இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பிழைகளை நீங்குதல் போன்றவைகளுக்கு சிறப்பு சுருக்க முறை திருத்தம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் 01.01.2018ஆம் தேதியைத் தகுதி நாளாகக்கொண்டு 2018ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 3ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேரும், பெண்கள் 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேரும், இதர பிரிவினர் 5,242 பேர் இடம் பெற்றிருந்தனர். தற்போது இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ௦1.௦1.2018 அன்று 18 வயது நிறைவடைபவர்கள் படிவம் 6ஐயும், பெயர் நீக்கம் படிவம் 7, திருத்தம் படிவம் 8, சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் குடிபெயர்ந்து, புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வருகிற 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 8, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள். மேலும், புதிய வாக்காளர் அட்டைக் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon