மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

மண்ணை அள்ளி பூசிக்கொண்ட மோடி!

மண்ணை அள்ளி பூசிக்கொண்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 8) காலை குஜராத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான வத்நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக நேற்று (அக்டோபர் 7) குஜராத் சென்றார். அங்கு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன்பின், இன்று காலை அவரின் சொந்த ஊரான வத்நகரை அடைந்த மோடி, அங்கு காரில் வலம் வந்தார். அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார்.

பின்னர் அவர் படித்த பள்ளிக்குச் சென்றார். அங்கு வெளியே மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக்கொண்டார். அப்போது சுற்றியிருந்த மக்கள் கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

இரண்டு நாள்கள் பயணமாக குஜராத் சென்றுள்ள மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோடி, “சொந்த ஊருக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இந்த நிலைக்கு உயரச் சொந்த ஊரில் கற்றுக்கொண்டதே காரணம். நாட்டுக்காகக் கடினமாக உழைப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

சுமார் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டத் திட்டமிட்டுள்ளார். பின்னர், வத்நகரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார் மோடி. தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது, குஜராத் முதல்வர் விஜய் ருபானியும், துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon