மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வலுக்கும் போராட்டம்!

அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வலுக்கும் போராட்டம்!

அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை நிறுத்தக் கோரி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை இந்திய நிறுவனமான அதானி நடத்த முன்மொழிந்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நிதி சார்ந்த பிரச்னைகளால் இத்திட்டம் பல வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை நிறுத்தக் கோரி ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் எழுந்துள்ளது. இத்திட்டத்தால் உலகவெப்பமயமாதல் அதிகமாகும் எனவும், ‘கிரேட் பேரியர் ரீஃப்’ பாதிப்படையும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்காக ‘ஸ்டாப் அதானி’ என்ற இயக்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயக்கம் 45 போராட்டங்களை நடத்தியுள்ளது. சிட்னியின் பாண்டி கடற்கரையில் சுமார் 1000 பேர்

‘ஸ்டாப் அதானி’ என்ற வடிவில் திரண்டனர். ஆஸ்திரேலியாவில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்துக்கு எதிராக உள்ளது சில வாக்கெடுப்புகள் மூலமாக தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இத்திட்டத்தால் ராயல்டி, வரி மூலமாக கோடிக்கணக்கான டாலர்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் எனவும், இத்திட்டத்தால் வேலைவாய்ப்புகளும், கிராமப்புறங்களுக்கு மின்வசதியும் கிடைக்கும் எனவும் அதானி நிறுவனம் கூறி வருகிறது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon