மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

பாகிஸ்தானில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

பாகிஸ்தானில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அந்நாட்டின் முதல் மெட்ரோ ரெயில் சேவையை இன்று( அக்டோபர் 8) பஞ்சாப் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தலைநகரான லாகூரில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அம்மாகாண அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு முடிவு செய்தது. இதற்காக, சீன தொழில்நுட்ப உதவியுடன் தனிப்பாதை அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக, 27.1 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பாதையில் இரண்டு எஞ்ஜின்களுடன் மூன்று பெட்டிகளை இணைத்து முதல் மெட்ரோ சேவையை இன்று பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரிப் தொடங்கி வைத்தார். இதன்மூலம், இரண்டரை மணி நேர பயணம் 45 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், 27 ரயில்கள் இறக்குமதி செய்யப்படும், அதில் 23 ரயில்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவரப்படும். இந்த மெட்ரோ ரயில் 26 ரயில் நிலையங்களை இணைக்கிறது. இதன்மூலம் ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பேர் வசதியாகப் பயணம் செய்ய முடியும். ஒரு ரயில் 1,000 பயணிகள் பயணிக்கலாம். அதாவது, 200 பேர் இருக்கையில் அமர்ந்து கொண்டும், 800 பேர் நின்று கொண்டும் பயணிக்க முடியும். 2025 ஆம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள் என ரயில்வே அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon