மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்!

பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்!

இந்தியப் பொருளாதாரம் சந்தித்த சரிவு தற்காலிகமானது என்றும், விரைவில் பொருளாதாரம் மீட்சி அடையும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்டோபர் 7ஆம் தேதி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் குஜராத் தலைநகர் காந்திநகரில் பேசுகையில், “2014-15ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருந்தது. 2015-16ஆம் ஆண்டில் 8 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருந்தது. 2016-17ஆம் ஆண்டில் 7.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சீராகும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு பாலத்தை கட்டமைக்கும் போது, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டிய தேவை ஏற்படும். வாகனங்கள் வரிசையில் நிற்கும். ஆனால் அது தற்காலிகமானது தான். பாலம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் நிலைமை இயல்புக்குத் திரும்பிவிடும். அதுபோல தான் ஜி.எஸ்.டி.யால் சில சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனால் நமது பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக இருப்பதால், விரைவில் பொருளாதாரம் மீட்சி அடையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon