மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நெற்கதிர் அரிதாள் எரிப்புக்கு மாற்று வழி!

நெற்கதிர் அரிதாள் எரிப்புக்கு மாற்று வழி!

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெற்கதிர் அரிதாள் எரிப்பை தடுத்து விவசாயிகளுக்கு மாற்று முறையை கையிலெடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த வேளாண் பருவத்தில் சுமார் 22.5 மில்லியன் டன் அளவிலான நெல் சாகுபடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பஞ்சாபில் மட்டும் 18 மில்லியன் டன் நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடைக்குப் பின்னர் விவசாய நிலங்களை அடுத்த பயிர் விதைப்புக்கு தயார்படுத்தும் வகையில் நெற்கதிர் அரிதாள்களை எரிக்கும் பழைய நடைமுறையை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. எனவே இதற்கான பல்வேறு மாற்று வழிகளை விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் கூறிவருகிறது.

இருப்பினும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாவட்டங்களில் இந்த நடைமுறையையே விவசாயிகள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். எனவே இந்த இரு மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. குறப்பாக அரிதாள் நீக்கப் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. மேலும், இயந்திரங்கள் வாங்கவும் அவர்களுக்கு மானியம் அளிக்கிறது. குறிப்பாக பஞ்சாப் மாநில அரசு, 2013ல் காற்று மாசுபாடு தடுப்பு சட்டத்தை (பிரிவு 19(5))புதுப்பித்தது. பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளது. இதன்மூலம் இந்த பருவத்தில் காற்று மாசுபாடு பெருமளவு குறையும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருதுகிறது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon