மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ரூ.5000 கோடி முதலீடு: பதஞ்சலி!

ரூ.5000 கோடி முதலீடு: பதஞ்சலி!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017-18ஆம் நிதியாண்டில் 5000 கோடி ரூபாயை பதஞ்சலி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால்கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பால்கிருஷ்ணா அக்டோபர் 7ஆம் தேதியன்று இண்டோரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மூ & காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆலைகளை அமைப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

இங்கிருந்து (இண்டோர்) 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தார் பகுதியில் உள்ள பிதம்பூர் தொழிற்பேட்டையில் பதஞ்சலி நிறுவனத்தின் உணவு பதப்படுத்துதல் ஆலை உள்ளது. 500 கோடி ரூபாய் முதலீட்டுடன் மார்ச் 2018 முதல் அந்த ஆலையில் உற்பத்தி தொடங்கும் என்று நம்புகிறோம். பிஸ்கட்டுகள், ரவை, நூடுல்ஸ், மாவு முதலியவற்றை இந்த ஆலை உற்பத்தி செய்யும். ஒரு நாளைக்கு இந்த ஆலை 1,000 டன் கோதுமையை உற்பத்தி செய்யும்.

ஒரு ஏக்கர் 25 லட்சம் என்ற கணக்கில் 40 ஏக்கர் நிலத்தை பதஞ்சலி நிறுவனத்துக்காக பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ளது. பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் பதஞ்சலி நிறுவனம் ஆராய உள்ளது. அரசு எங்களுக்கு நிலம் வழங்கினால் மாடுகள் தங்குவதற்கான இடத்தையும் நாங்கள் அமைப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon