மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

ஹாலிவுட் படத்துக்கு சளைத்ததல்ல!

ஹாலிவுட் படத்துக்கு சளைத்ததல்ல!

ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘2.0’. ஏற்கனவே வெளியான கிளிம்ப்செஸ் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வேளையில், அதன் மேக்கிங் வீடியோ நேற்று ஷங்கர் தனது ட்விட்டரில் வெளியிட்டார். முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எந்தவொரு ஹாலிவுட் படத்துக்கும் சளைத்தது அல்ல என்று ரஜினி கூறியுள்ளார்.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி 28 லட்சத்திற்கும் மேல் காணப்பட்டிருக்கிறது. இதன் மேக்கிங் வீடியோவில் இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட பலரும் பேசி இருக்கின்றனர்.

இதில் படம் குறித்து பேசியுள்ள ரஜினி, "இயக்குநர் ஷங்கர் 3Dயை மனதில் வைத்துதான் இக்கதையை எழுதியிருக்கிறார். படத்தில் நான் தோன்றும் 3D காட்சியை மானிட்டரில் பார்த்தேன். மீண்டும் மீண்டும் மெய்மறந்து பார்த்தேன். அது ஒரு பிரம்மாண்ட அனுபவம். ஷங்கரை பாராட்டுகிறேன். மக்களின் அனுபவத்தைக் காண மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.எந்த ஒரு பிரம்மாண்டமான ஹாலிவுட் படத்துக்கும் இந்தப் படம் சளைத்து அல்ல" என்றார்.

"இக்கதைக்கு தேவைப்பட்டதால் 3D கொண்டு படத்தை எடுத்தோம். நிறைய ஹாலிவுட் படங்கள் 2Dயில் எடுக்கப்பட்டு 3Dக்கு மாற்றப்படுகிறது. இது நேரடியாக புதுமையான 3D கேமராவால் எடுக்கப்பட்டது. பார்வையாளர்களை திரைப்படத்துக்குள் பயணிக்கிற உணர்வை இப்படம் ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை மானிட்டரில் பார்க்கும் போதும் நேரடியாக காட்சிகளை பார்க்கிற உணர்வைத் தருகிறது. அதை நீங்கள் திரையில் கண்டு மகிழ்ச்சி அடையலாம்" என்று ஷங்கர் கூறியுள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் அக்ஷய் குமார்,‘‘நான் எதிர்பார்த்ததை விட 3Dயில் வேலை செய்தது கடினமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் எவ்வாறு திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். இந்தியாவுக்கு இது புதுமையான அனுபவம்’’ என்றார்.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா கூறுகையில், "பார்வையாளர்கள் திரைப்படத்துக்குள் பயணிக்கிற அளவிற்கு ஒரு அனுபவத்தைத் தரும். இந்தியாவில் அதிக அளவில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு புது உணர்வைத் தரும். ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 2D வெறும் காட்சி மட்டுமே. 3Dயில் புதிய பரிமாணம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று விவரித்துள்ளார்.

2.0 மேக்கிங் வீடியோ

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon