மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ராணுவ வீரர் தற்கொலை!

ராணுவ வீரர் தற்கொலை!

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காஷ்மீர், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனந்த்நாக் மாவட்டம், பாகல்காம் பகுதியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராணுவ முகாமில் பணியாற்றி வந்த பெங்களூருவை சேர்ந்த நரேந்திரா என்பவர் இன்று (அக் 8) தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்தவரை மீட்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பின்னர் நரேந்திராவின் உடல் பெங்களூருவில் உள்ள அவரது உறவினர்களிடம் இறுதி சடங்கிற்காக ஒப்படைக்கப்படும் என்று ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடந்த 2014 ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் 310 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில், 84 பேரும், 2015ம் ஆண்டில் 78 பேரும், 2016ம் ஆண்டில் 104 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராஜ்யசபாவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon