மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழைவெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் தெற்கு ஆந்திரம் முதல் தமிழகத்தின் தெற்குப் பகுதி வரை நிலப்பரப்பில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து, தெலங்கானா அருகில் நிலை கொண்டுள்ளது.

வடக்கு கர்நாடகத்திலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை பெய்த மழையின் அளவு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 70மி.மீ, மதுரை மாவட்டம் சித்தம்பட்டி 60 மி.மீ, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் 50மி.மீ, சோழவரம், செங்குன்றம் 30மி.மீ, கரூர் மாவட்டம் கடவூர், அரவக்குறிச்சி 40மி.மீ, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருகோவிலூர் ஆகிய இடங்களில் 20மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon