மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

தீவிரவாத செயல்களை குறைத்த பணமதிப்பழிப்பு!

தீவிரவாத செயல்களை குறைத்த பணமதிப்பழிப்பு!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மூ & காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் தீவிரவாத செயல்கள் மற்றும் கிளர்ச்சிகள் வெகுவாகக் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கல் எறிபவர்கள், வன்முறைச் செயலில் ஈடுபடுபவர்கள் போன்றோருக்கு ரூ.5000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதாகக் கூறுகின்றனர். அந்த பணமெல்லாம் கருப்புப் பணம் தான். தற்போது எட்டு மாதமாக எந்த வன்முறைச் செயலும் நடைபெறவில்லை. ஏன் என்று தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஒரு அதிரடியான அறிவிப்பை (பணமதிப்பழிப்பு) வெளியிட்டார். இதன்மூலம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இதனால் தீவிரவாதிகளின் கையிலிருந்த கருப்புப் பணம் முடங்கியது. இதனால்தான் வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை, தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி ஒழிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது, பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று பல்வேறு தரப்பால் கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், தீவிரவாதிகளின் நிதியை ஒழிக்க இத்திட்டம் பயன்பட்டுள்ளது என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon