மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

தீபாவளி: ரயில்வே எச்சரிக்கை!

தீபாவளி: ரயில்வே எச்சரிக்கை!

வெடி, பட்டாசு போன்ற விபத்துக்களை விளைவிக்கும் பொருட்களை ரயிலில் எடுத்துச் சென்றால், மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் மூவாயிரம் அபராதமும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை கலை கட்டியுள்ளது. நாடு முழுவதும் வருகிற 18 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. அதனால், குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில், பட்டாசு வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரயிலில் பட்டாசு கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி ரயிலில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் மூவாயிரம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகாசி, திருத்தங்கல்,விருதுநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளியை எந்தவித விபத்துக்கள் நேரிடாமல் கொண்டாட இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்று, கடந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால்,மூன்றாண்டு சிறைத்தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon