மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஸ்டார் நடிகர்களின் படங்களில் ரகுல்

ஸ்டார் நடிகர்களின் படங்களில் ரகுல்

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஸ்பைடர். இதில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். தற்போது மீண்டும் மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

கடந்த ஆண்டு நாகார்ஜூனா,கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `ஊப்பிரி' திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. தமிழில் `தோழா' என்ற பெயரிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இவர் மகேஷ் பாபுவின் 25வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக செய்திகள் முன்பு வெளிவந்தது. ஆனால், இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்து படக்குழுவினருடன் தொடர்பு கொண்ட போது, "ஆமாம். இதில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். ஸ்பைடர் படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக மீண்டும் மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவர் நடிப்பதற்கான தேதி, படப்பிடிப்பு அட்டவணைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளதாக டெக்கான் கிரோனிக்கல் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ரகுல், தற்போது மகேஷ் பாபுக்கு ஜோடியாகி உள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக அவர், ஒப்பந்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon