மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

சிமெண்ட் விலை உயர்வு!

சிமெண்ட் விலை உயர்வு!

இந்த நிதியாண்டின் (2017-18) இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) சில்லறை வர்த்தகத்தில் சிமெண்ட் விலை பை ஒன்றுக்கு ரூ.12 வரை அதிகரித்துள்ளது என்று கோடக் இன்ஸ்ட்யூசனல் ஈக்விட்டீஸ் ரிசர்ச் முர்துஷா அர்சிவலா ஆய்வு கூறியுள்ளது.

இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "மேற்கு மாநிலங்களில் சிமெண்ட் ரூ.36 வரையிலும், தென் மாநிலங்களில் ரூ.15 வரையிலும் விலை அதிகரித்துள்ளது. சிமெண்ட் நிறுவனங்களின் லாபத்தைப் பொறுத்த வரையில் ஆண்டுக்கு 3 சதவிகிதம் இழப்பைச் சந்தித்து வருகிறது. சிமெண்ட் உற்பத்திக்கான செலவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

அதேசமயம் சிமெண்ட் நிறுவனங்கள் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 6 சதவிகித வளர்ச்சியையும் சந்தித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சிமெண்ட் விலை பை ஒன்றுக்கு ரூ.14 மற்றும் ரூ.3-5 வரை சரிந்துள்ளது. சில பகுதிகளில் விலை சரிவு என்பது ஜி.எஸ்.டியின் மூலம் கிடைத்த பலனாகும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon