மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

அடுத்த தலைமுறைக்கான பனைத் திட்டம்!

 அடுத்த தலைமுறைக்கான பனைத் திட்டம்!

விளம்பரம்

தொன்மை மரமான பனை மரங்கள் தமிழகத்தின் கிராமங்களில் இருந்து கூட மெல்ல மெல்ல மறைந்து வரும் நிலையில், மாநகரமான சென்னையில் பனைமரங்களை நடுவது மனித நேயருக்கு எப்படி சாத்தியமானது?

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், எண்ணூர் போன்ற பகுதிகளில் அண்மைக் காலமாக கடலரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலோரத்தில் உள்ள மீனவர்களின் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கடலரிப்பை தடுக்க தடுப்புச் சுவர்களை எழுப்புவது, கற்களைக் கொட்டுவது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது அறிவியல் பூர்வமாக இல்லை என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டதால், அறிவியல் பூர்வமான திட்டத்தை உருவாக்கும் வரை, கடல் அரிப்பைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் இயற்கையான முறையில் கடல் அரிப்பைத் தடுக்க, கடற்கரை ஓரங்களில் வளர்ந்த பனை மரங்களை நட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மனித நேயரின் திட்டம் பற்றி கூறிய மாநகராட்சி அதிகாரிகள்,

’’சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்கத்தை குறைப்பதற்காக, கடற்கரை ஓரங்களில், வளர்ந்த பனை மரங்கள் நட்டு பராமரிக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். அதற்காக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மாநகராட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பனை மரங்கள் காற்று தடுப்பான் மட்டுமல்லாது, சல்லி வேர்கள் அதிக அளவில் இருப்பதால், நீர் மற்றும் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பையும் தடுக்கும் தன்மையுடையது. கடற்கரை ஓரங்களில் வளர்ந்த மரங்களை நடவு செய்தால், நன்றாக வளரும் என்று மாநகராட்சி பூங்கா துறை சான்றளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லை யில் மொத்தம் 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை வருகிறது. முழு நீளத்துக்கும் பனை மரங் களை நட இருக்கிறோம். இதற்காக தருமபுரி, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட் டங்களில் இருந்து வளர்ந்த பனை மரங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை பனை மரங்களை நடுகிறோம்’’ என்கிறார்கள்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடகச் செய்தி ஒன்று மனித நேயரின் நிர்வாகத்தில் பனை விதைகளை விதைக்கவும், பனை மரக் கன்றுகளாக நடவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உரக்கச் சொல்கிறது. அந்த ஊடகச் செய்தியை அறிவோம்.

’’சுற்றுச்சூழல் விதியின் படி, நகர பரப்பளவில், 33.3 சதவீதம் பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால், 'வர்தா' புயலுக்கு, ஒரு லட்சம் மரங்களை சென்னை இழந்ததால், அதன் பசுமை போர்வை, 5 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால், சென்னையின் மொத்த நிலப்பரப்பில், 33.3 சதவீதம் பசுமை போர்வை உருவாக்க வேண்டிய, அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2013ல், மாநகரில் உள்ள, 126 குளம், ஏரி ஆகியவற்றின் கரைகள் ஆகியவற்றில், 749 கி.மீ., துாரத்திற்கு, பனைமரம் நட முடிவு செய்யப்பட்டது. அப்பணிகளை, தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுத்த முடிவானது. ஒரு பனங்கொட்டை, ஐந்து ரூபாய் என, விலை நிர்ணயம் செய்து, முதல்கட்டமாக, 6.5 லட்சம் பனங்கொட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு விதைக்கப்படன. ஆனால் அனைத்து பனங்கொட்டைகளும் முளைக்கவில்லை.

மீண்டும்பனங்கொட்டைகளை நடவு செய்து, பனை முளைப்பதற்கு பெரும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே, பனங்கொட்டைகள் விதைக்காமல், ஐந்து அடி வளர்ந்த மரங்களை நடவு செய்ய, மாநகராட்சி தற்போது தீர்மானித்தது. அடுத்த கட்டமாக, சென்னை கடற்கரையில், 3 மீட்டர் இடைவெளிக்கு ஒரு பனைமரம் நடவு செய்யப்படும்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை முதல், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு, 2,000 பனைமர கன்றுகள் சோதனை முயற்சியாக நடவு செய்ய முடிவு செய்யப்பட்டன. இதற்கு, 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டது.

பனைமரங்கள் நன்கு வளர்ந்தால், கடற்கரை அழகுடன் காணப்படும்; மேலும், மணல் அரிப்பை தடுப்பதுடன், புயல் ஏற்பட்டால், காற்றின் வேகத்தை தடுத்து, பேரழிவில் இருந்து, கரை காக்கவும் உதவும்’’ என்கிறது அந்த ஊடகச் செய்தி.

மனித நேயரின் திட்ட அறிக்கையின் படி சென்னை மாநகராட்சி எல்லையில், எண்ணுாரில் இருந்து உத்தண்டி வரை, மொத்தம், 55 கி.மீ., நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இங்கு, மரம் நடுவதற்கு ஏற்ற மணல் பரப்பு உள்ள இடமாக, 25 கி.மீ., துாரம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னையில் மட்டும், 8,000 பனைமரங்கள் நடவு செய்ய முடியும்.

இன்னும் சில வருடங்களில் சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் பனை மரங்கள் அழகாக அசையும். அந்த ஒவ்வொரின் அசைவும் மனித நேயரின் பனை மரத் திட்டத்துக்கு நன்றி சொல்வதாக இருக்கும். அடுத்த தேர்தலுக்காக சிந்திப்பவர் அரசியல்வாதி, அடுத்த தலைமுறைக்காக சிந்திப்பவர்தான் உண்மையான தலைவர்.

மனித நேயர் இதில் இரண்டாவது வகை என்பது எதிர்கால சென்னைப் பனை நமக்கு உணர்த்தும்!

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon