மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

கேரளா: மிதக்கும் சோலார் மின்நிலையம்!

கேரளா: மிதக்கும் சோலார் மின்நிலையம்!

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி ஆலை கேரளாவில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள பாணசுர சாகர் நீர்த்தேக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்தில் கட்டமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடையும். இந்த மின் உற்பத்தி நிலையம் தண்ணீரில் 6000 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் மூலம் அதிகபட்சமாக 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். கேரள மாநில மின்வாரிய (கே.எஸ்.இ.பி) ஒப்பந்தத்தின்படி இந்த மெகா திட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கே.எஸ்.இ.பி துணை நிர்வாகப் பொறியாளர் மனோகரன் கூறும்போது, “சோலார் பேனல்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த சோலார் மின் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா விரைவில் நடைபெறும்” என்றார். இந்தத் திட்டத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஏட்டெக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த ஆலை உருவாக்கப்படுகிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 7.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon