மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

பேட்மிண்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்!

பேட்மிண்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்!

டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தின், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், பிரனாய் தோல்வியடைந்த நிலையில், ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில், சூப்பர் சீரிஸ் பிரிமியர் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார். மொத்தம் 29 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், சாய்னா 10-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதியில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சனை எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் 14-21, 22-20, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரனாய், தென் கொரியாவின் சன் வான் ஹோ உடன் மோதினர். இதில் பிரனாய் 13-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon