மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கேரளா ஸ்பெஷல்: கொண்டைக்கடலை கூட்டுக் கறி - கிச்சன் கீர்த்தனா

கேரளா ஸ்பெஷல்: கொண்டைக்கடலை கூட்டுக் கறி - கிச்சன் கீர்த்தனா

‘சப்பாத்திக்குச் சுவையாகத் தொட்டுக்கொள்ள வித்தியாசமாக ஏதேனும் டிஷ் செய்ய ஐடியா கொடுங்க கீர்த்தனா’ எனக் கேட்டுக்கொண்டார் தோழி ஒருத்தி. சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் சாதத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும் இது.

தேவையானவை:

கறுப்பு கொண்டைக்கடலை – அரை கப், வாழைக்காய் – 1, சேனைக்கிழங்கு – 250 கிராம், மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி, மிளகுத்தூள் – 1/2 மேசைக்கரண்டி, துருவிய தேங்காய் – அரை மூடி, உப்பு – தேவையான அளவு, கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி.

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து, காலையில் குக்கரில் வேக வைத்து தனியே வைக்கவும். சேனைக்கிழங்கை தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வேக வைக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள கடலையைச் சேர்க்கவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் நன்கு பிரவுன் நிறம் வரும்வரை வறுக்கவும். இதில் சிறிதளவு தேங்காய்த் துருவலை தனியே அரைத்துக் கொள்ளவும்.

பிறகு வேகவைத்துள்ள காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூப்பரான கொண்டைக்கடலை கூட்டுக் கறி ரெடி.

கீர்த்தனா மொக்கை ஜோக்ஸ்:

ஆசிரியர்: பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?

மாணவன்: என்ன மிஸ் இப்படி சொல்றீங்க... பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன். ஆனால், பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல. அதான் உங்களுக்குத் தெரியல.

கிச்சன் கீர்த்தனா 01 | கிச்சன் கீர்த்தனா 02 | கிச்சன் கீர்த்தனா 03 | கிச்சன் கீர்த்தனா 04 |

கிச்சன் கீர்த்தனா 05 | கிச்சன் கீர்த்தனா 06 | கிச்சன் கீர்த்தனா 07 |

கிச்சன் கீர்த்தனா 08 | கிச்சன் கீர்த்தனா 09 | கிச்சன் கீர்த்தனா 10 |

கிச்சன் கீர்த்தனா 11 | கிச்சன் கீர்த்தனா 12 | கிச்சன் கீர்த்தனா 13 |

கிச்சன் கீர்த்தனா 14 | கிச்சன் கீர்த்தனா 15 | கிச்சன் கீர்த்தனா 16 |

கிச்சன் கீர்த்தனா 17

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon