மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

தமிழ் சினிமா எழுபதுகளில் முக்கியமான மாற்றத்தைச் சந்தித்தது. அதில் இயக்குநர் பாலசந்தருக்கும் முக்கிய பங்கு உண்டு. வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி ஆகிய சமூக பிரச்னைகளைப் பேசிய படங்கள் சினிமா ரசிகர்களால் இன்றளவும் பேசப்படுகின்றன. கறுப்பு வெள்ளையில் பல வெற்றிகளைக் கொடுத்த அவர், வண்ணம் வந்த பின்னரும் அதைத் தொடர்ந்தார். இருப்பினும் கறுப்பு வெள்ளையே தனக்கு மிகவும் வசதியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பம் குறித்து அவரது பின்வரும் வார்த்தைகள் மிக முக்கியமானவை.

“தொழில்நுட்பம் என்பது இயக்குநரின் இருக்கையை ஆக்கிரமிக்கக் கூடாது. அது இயக்குநருக்குப் பின்னால் இருக்க வேண்டும்.”

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon