மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

சமுத்திரக்கனிக்கு ஜோடி இனியா!

சமுத்திரக்கனிக்கு ஜோடி இனியா!

மணிமாறன் இயக்கும் ‘சங்கத்தலைவன்’ படத்தில் சமுத்திரக்கனி, இனியா முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்

சித்தார்த்தின் ‘உதயம் NH4’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிமாறன். இதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் ‘பொறியாளன்’ மற்றும் ஜெய்யின் ‘புகழ்’ ஆகிய இரு படங்களை இயக்கினார். தற்போது, மணிமாறன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சங்கத் தலைவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இனியா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ மூலம் தயாரிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்தில் வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

பட வேலைகள் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை நவம்பர் 15ஆம் தேதி தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon