மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

கர்ப்பிணிக்குச் சிகிச்சை மறுப்பு!

கர்ப்பிணிக்குச் சிகிச்சை மறுப்பு!

‘வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என காஞ்சிபுர மருத்துவமனை நிர்வாகம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், பொன்னை கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவவலியுடன் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் சரஸ்வதிக்கு முதல் பிரசவத்தின்போது குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்ததால், இரண்டாவது பிரசவத்திலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதி அவரை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

சரஸ்வதியுடன் அவரது சகோதர் சென்றிருந்தார். அவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் காஞ்சி தலைமை அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டது. வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 100 கி.மீ தொலைவிலுள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சரஸ்வதி அனுப்பி வைக்கப்பட்டார். ‘பிரசவ வலியுடன் வந்த பெண்ணை வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை துணை இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon