மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் இருக்க - பியூட்டி ப்ரியா

உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் இருக்க - பியூட்டி ப்ரியா

‘உன் உதடுகளை கோவைப்பழத்துடன் எல்லாம் ஒப்பிட மாட்டேன். அது கிளிக்குப் பிடித்த உணவு, உன் உதடு எனக்கு மட்டுமே!’ எனக் கவிபாடும் அளவுக்கு உதடுகள் மென்மையாகவும் அழகானதாகவும் இருந்தால் பரவாயில்லை. அகமும் முகமும் அழகாயிருந்து உதடு மட்டும் கறுப்பாகவோ அல்லது காய்ந்து செதில் செதிலாகவோ இருந்தால் மொத்த அழகையுமே கெடுத்துவிடும். வாருங்கள் சில வழிமுறைகளைக் காணலாம்.

ரோஜா இதழ்களை பாலில் ஊறவைத்து சில துளி அதில் கிளிசரின் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த அந்த விழுதை பாலால் உதட்டை சிறிது நேரம் மசாஜ் செய்தால் அற்புத பலன் பெறலாம்.

எலுமிச்சைச் சாறு

அரை மூடி எலுமிச்சம்பழத்தைக்கொண்டு உதடுகளில் தேய்த்துவரலாம். எலுமிச்சை சிறந்த ஒரு ப்ளீச் ஆகும். சர்க்கரை உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, உதட்டுக்குப் பொலிவை தரும்.

மஞ்சள்தூள் மற்றும் பால்

மஞ்சள்தூள், கடலை மாவு மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உதட்டில் தடவவும். கடலை மாவு உதட்டுக்கு வறட்சியை தரும். வறண்ட சருமம் உள்ளவர்கள், கடலை மாவை பயன்படுத்த வேண்டாம்.

மேக்கப்

உதட்டின் நிற மாற்றத்துக்கு மற்றுமொரு காரணம், பகலில் மேக்கப் போட்டுக்கொண்டு இரவில் உறங்குவதற்கு முன் அதனை நீக்காமல் உறங்குவதாகும். உறங்குவதற்கு முன் மறக்காமல் சிறிது ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயை ஒரு பஞ்சில் நனைத்து உதட்டில் மென்மையாக தடவிய பிறகு உறங்கச் செல்லுங்கள்.

பிரஷ்

உதட்டில் பலருக்கும் வறண்ட தோல் காணப்படும். நாம் அன்றாடும் பயன்படுத்தும் பிரஷ்ஷைக்கொண்டு உதடுகளில் தேய்க்க, இறந்த செல்கள் நீங்கி புதியன பளிச்சென தோற்றமளிக்கும். பிரஷ் கொண்டு மெதுவாக உதடுகளில் தேய்ப்பதை பெரும்பாலும் வேலை முடித்து இரவு நேரங்களில் செய்வது நலம்.

பியூட்டி ப்ரியா 01 | பியூட்டி ப்ரியா 02 | பியூட்டி ப்ரியா 03 | பியூட்டி ப்ரியா 04 | பியூட்டி ப்ரியா 05 | பியூட்டி ப்ரியா 06 | பியூட்டி ப்ரியா 07 | பியூட்டி ப்ரியா 08 | பியூட்டி ப்ரியா 09 | பியூட்டி ப்ரியா 10 | பியூட்டி ப்ரியா 11 | பியூட்டி ப்ரியா 12 | பியூட்டி ப்ரியா 13 | பியூட்டி ப்ரியா 14 | பியூட்டி ப்ரியா 15 | பியூட்டி ப்ரியா 16

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon