சங்கமித்ரா படத்தில் நடிக்க தோனி படத்தின் நாயகி திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். ‘சங்கமித்ரா’வாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதிஹாசன் சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறியதால் ‘சங்கமித்ரா’ கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்து வந்தது.
இந்த நிலையில், சங்கமித்ராவாக நடிக்க பாலிவுட் நடிகை திஷா பதானி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த தகவலைப் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் அவர், “இந்தப் படம் எங்களுடைய நிறுவனத்தின் கனவு படம். முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படத்தின் ப்ரி புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
எட்டாம் நூற்றாண்டை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.