மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை கொடுத்தால் நடவடிக்கை!

மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை கொடுத்தால் நடவடிக்கை!

நமக்குச் சின்னதாக காய்ச்சல், தலைவலி வந்தால் உடனே அருகிலுள்ள மெடிக்கலுக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு கொள்வோம். இவ்வாறு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்வதால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த் நிலையில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரை வழங்கும் கடைக்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் பாயும் ஆரணி ஆற்றை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார். அதையடுத்து, நகர மையப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்று தினந்தோறும் குப்பைகளை ஊழியர்கள் அள்ளுகிறார்களா, குழாய்களில் சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறுகையில், “டெங்குவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 19 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் 4 பேர் கும்மிடிபூண்டியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 225 பேர் சாதாரண காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சரியாக சிகிச்சை அளிக்காமல் மற்றும் போலி மருத்துவர்கள் குறித்து 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon