மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 16 டிச 2019

நவம்பரைக் குறிவைத்த இப்படை வெல்லும்!

நவம்பரைக் குறிவைத்த இப்படை வெல்லும்!

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் இப்படை வெல்லும். தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றிப் படங்களை தந்த கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இதன் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆக்சன் த்ரில்லர் பாணியிலான இப்படத்தில் உதயநிதி, மஞ்சிமா இருவருமே சாஃப்ட்வேர் இன்ஜினியர்களாக நடித்திருக்கிறார்கள். உதயநிதிக்கு அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திற்கும் இதற்கு மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

பெரும் வரவேற்பைப் பெற்று வரும் `காட்ஃபாதர் கண்மணியே' மற்றும் `குலேபா வா' ஆகிய இரண்டு பாடல்களை ஆதாரா, குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் ஆகிய மூன்று புலம்பெயர் தமிழர்களை பாட வைத்து புதுமை செய்துள்ளார் இமான். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், பிரவின் கே.எல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதை அடுத்து படத்தை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிட இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 21) தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon