மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

பாட்டி வைத்தியம் வேண்டாம்: அமைச்சர்!

பாட்டி வைத்தியம் வேண்டாம்: அமைச்சர்!

காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமோ, பாட்டி வைத்தியமோ செய்ய வேண்டாம்; காய்ச்சல் வந்தவுடன் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(அக்டோபர் 22) ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். டெங்குவுக்கு சிகிச்சையளிக்க அனைத்து மருத்துவர்களுக்கும் முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் போலி மருத்துவர்கள் 10 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், போலி மருத்துவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.

மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமலேயே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தயாராக உள்ளோம். தனியார், அரசுப் பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்குடெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமோ, பாட்டி வைத்தியமோ செய்ய வேண்டாம்; காய்ச்சல் வந்தவுடன் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும்.டெங்கு முற்றிலுமாக குணமாகிவிட்டது என்று மருத்துவ அறிக்கை வரும் வரை டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரியோர்கள் 5 நாள் நேரடி மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். மேலும் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் 7 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். எனவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon