மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

மிளகு விலை வீழ்ச்சி!

மிளகு விலை வீழ்ச்சி!

தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதியில் மிளகு உற்பத்தி சிறப்பாக செய்யப்படுகிறது. தற்போது நல்ல மிளகு ஏற்றுமதி சரிந்து வருவதால் உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

குலசேகரம் சந்தையில் நடந்த விற்பனையில் முதல் தர நல்ல மிளகு கிலோ ரூ.452க்கும், இரண்டாம் தர மிளகு கிலோ ஒன்றுக்கு ரூ.432க்கும் கொள்முதல் ஆனது. ஆனால் இதன் விலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ.750 ஆக இருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே நல்ல மிளகு விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நல்ல மிளகு கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.900ஆக இருந்தது.

வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மிளகு உற்பத்தி அதிகமாக இருக்கும். தற்போது சீசன் துவங்காத நிலையில் விலை வீழ்ச்சி அதிகரித்துள்ளதால், சீசன் துவங்கிய பின்னர் விலைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைக் காக்க வேண்டுமென்றும் மிளகு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon