மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 11 டிச 2019

உணவை டெலிவரி செய்யும் ஃபேஸ்புக்!

உணவை டெலிவரி செய்யும் ஃபேஸ்புக்!

தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சியானது நம்மை மேலும் சோம்பேறிகளாக்கி விட்டது என்று கூறலாம். முன்பு உணவு வேண்டுமெனில் சந்தைகளுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவந்து சமைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு சில மணி நேரம் பயணம் செய்து ஹோட்டலில் சென்று சாப்பிட்டனர். ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது.

ஆன்லைன் மூலமாக நாம் இருக்குமிடத்திலேயே உணவைச் சுடச்சுட டெலிவரி செய்து விடுகின்றனர். அந்தப் பட்டியலில் தற்போது பேஸ்புக் செயலியும் இணைந்திருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் உணவு டெலிவரி செய்யும் சேவையை விரைவில் வழங்க இருக்கிறது. இதற்கான சோதனை முயற்சிகள் சத்தமில்லாமல் துவங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த சேவை விரைவில் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பிரபலமாக உள்ள பல்வேறு உணவகங்களின் உணவுகளை பேஸ்புக்கில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து, வீட்டில் இருந்து அதனைச் சுவைத்து மகிழ முடியும்.

சிறிய வகைக் கடைகள் முதல், மிகப்பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்து வகையான உணவகங்களில் இருந்தும் உணவை ஆர்டர் செய்ய முடியும். நாம் தேர்வு செய்யும் உணவகம் குறித்து தங்களது நண்பர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் எக்ஸ்புளோர் மெனுவில் ஆர்டர் ஃபுட் எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகங்களைத் தேர்வு செய்து, பிடித்தமான உணவு வகைகளை வாங்கிச் சாப்பிடலாம்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon