மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

இயற்கையைக் காக்கும் சிறுவன்!

இயற்கையைக் காக்கும் சிறுவன்!

இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஓராண்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துவருகிறார் தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன்.

தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரமன். இவர் வடுகப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இவருக்குச் சிறு வயது முதலே மரம் வளர்ப்பதில் ஆர்வம் இருந்ததால் தன் வீட்டில் செடிகளை நட்டு வந்துள்ளார்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெற்றோர் செலவுக்குக் கொடுக்கும் பணத்தைச் சேகரித்து மரக்கன்றுகளை வாங்கிக் குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள், கோவில்கள் ஆகிய இடங்களில் வேம்பு, நாவல், கொன்றை போன்ற மரக்கன்றுகளை நட்டுவருகிறார். படிப்பிற்கு நடுவே மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தச் சிறுவனின் முயற்சியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

வர்தா புயலில் இழந்த மரங்களை மீட்கும் வகையில் சமீப காலமாக அரசும், தனியார் தொண்டுநிறுவனங்களும் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் எதிர்காலத்தில் மரங்களின் சேவை நமக்குத் தேவை என்பதை உணர்ந்த இந்தச் சிறுவன் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், மழை பொழிவை அதிகரிக்கவும் பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருவது பெருமை கூரிய விஷயமாக உள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon