மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

எல்லா படங்களும் திரையரங்குக்கானது அல்ல!

எல்லா படங்களும் திரையரங்குக்கானது அல்ல!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ படத்தின் நான்கு நாயகிகளுள் ஒருவராக நடித்து கவனம் பெற்ற ஸ்ருதி ஹரிஹரன், `திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் படங்கள் தியேட்டரில் வெளிவர வேண்டுமென்ற அவசியமில்லை' என்று தெரிவித்துள்ளார்.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ஸ்ருதி நடித்துள்ள திரைப்படம் நிலா. நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வரும் இப்படம், போன வருடம் லண்டனில் நடைபெற்ற ரெயின்டான்ஸ் திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டது. இப்படத்தைப் பார்த்தவர்கள் ஸ்ருதியின் நடிப்பையும் படத்தினையும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் வெளியிட்டால் நல்ல வரவேற்பைப் பெறுமே என்ற கேள்விக்கு, " எல்லா படங்களையும் தியேட்டரில் வெளியிடுவதற்காக உருவாக்குவதில்லை. சில படங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனத் தயாராகி வருகிறது. குடும்பங்கள் பார்க்கும் படியாகத் தயாராவதில்லை. நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு தியேட்டரில் வெளியான காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் போல எல்லா படங்களும் வெளிவரவேண்டுமென அவசியமில்லை. சில படங்கள் தேர்ந்தெடுத்து வியாபாரமாகின்றன. இப்படம் தியேட்டரில் வெளிவரவில்லை என்ற வருத்தமில்லை. திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை பெறுவதைப் பெருமையாக கருதுகிறேன்" என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon