மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் ஓ.என்.ஜி.சி!

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் ஓ.என்.ஜி.சி!

2020ஆம் ஆண்டுக்குள் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒ.என்.ஜி.சி) 4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'பிரதமர் நரேந்திர மோடி எண்ணெய் இறக்குமதியை 10 சதவிகிதம் அளவுக்குக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அந்த அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஒ.என்.ஜி.சி 2020 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்யும். கச்சா எண்ணெய் உற்பத்தி தற்போது 22.6 மில்லியன் டன்னாக உள்ளது. இதன் அளவு 2021-22ஆம் ஆண்டுக்குள் 26.42 டன்னாக அதிகரிக்கும்.'

இந்தியா 2005-06 முதல் 2015-16 வரை கிட்டத்தட்ட 1 டிரில்லியன் (1 டிரில்லியன்=1000 கோடி) அமெரிக்க டாலர்களைக் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிட்டுள்ளது. 2013-14ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 77 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்குச் சமையல் எரிவாயு அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எரிபொருள் வீணாவது குறையும் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon