மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

மெர்சல் சர்ச்சை: தயாரிப்பாளர்களின் நிலையற்ற கருத்து!

மெர்சல் சர்ச்சை: தயாரிப்பாளர்களின் நிலையற்ற கருத்து!

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்கப்போவதில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பணம் மதிப்பழிப்பு, மருத்துவத் துறை போன்றவை குறித்து இடம்பெற்றிருக்கும் விமர்சன கருத்துகளுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் சில மருத்துவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருவதோடு அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி வருகின்றனர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என்.ராமசாமி அறிக்கை ஒன்றை நேற்று (அக்டோபர் 21) வெளியிட்டார். அதில் அவர், “மெர்சல் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் படமும் அல்ல. படத்தில் எதைப்பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை வெளியாகி சில மணி நேரத்திலேயே ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில், “மெர்சல் படத்தின் எந்த காட்சிகளை நீக்கவோ, வசனங்களை மியுட் செய்யவோ மாட்டோம். அது குறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.#PeaceBro” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon