மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

ஜி.எஸ்.டி: செப்டம்பர் மாத வரித்தாக்கல்!

ஜி.எஸ்.டி: செப்டம்பர் மாத வரித்தாக்கல்!

செப்டம்பர் மாதத்தில் 39.4 லட்சம் பேர் வரித்தாக்கல் மற்றும் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர் என்றும் ஆனால் இது அரசு எதிர்பார்த்த எண்ணிக்கையை விடக் குறைவு என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு மாதமும் தொழில் நிறுவனங்கள் கட்டாயமாக வரித்தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 39.4 லட்சம் பேர் வரித்தாக்கல் மற்றும் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இது ஆகஸ்ட் மாதத்தை விடச் சற்று அதிகமாகும். ஆகஸ்ட் மாதத்தில் 37.6 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்திற்கான வரித்தாக்கல் செய்ய இறுதி நாளாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நிர்ணயிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்த மாதத்தில் வரித்தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தோம். இருப்பினும் சற்று குறைந்துள்ளது. அதேபோல ரிட்டன் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையும் எதிர்பார்ப்பை விடச் சற்று குறைவாகவே உள்ளது.'

அதேபோல ஜி.எஸ்.டி கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் இதேபோல காலாண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்யும் நிறுவனங்களின் விற்றுமுதல் மதிப்பை ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon