மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

ஆர்.கே.நகர் : 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்!

ஆர்.கே.நகர் : 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்!

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 4.78 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தமிழக தேர்தல் கமிஷனர் லக்கானி கூறியுள்ளார். ஆனால், இடைத்தேர்தல் நடக்க வேண்டிய ஆர்.கே.நகரில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் அதிமுக சார்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் திமுக புகார் அளித்துள்ளது.அவர்களை இதுவரை நீக்கப்படவில்லை. எனவே, அங்குள்ள போலி வாக்காளர்களை உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே நகரில் நிறுத்திவைக்கப்பட்ட இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடைபெற்றதே. பணப்பட்டுவாடா தொடர்பாக விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், முதல்வர் பெயரும் உள்ளது.மேலும், அது தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இடைத்தேர்தல் நடக்கும் என்பது வேதனை அளிக்கிறது.

எந்தக் காரணத்திற்காக தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. எப்.ஐ.ஆர் கூட போடவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டு அதன்பின் தேர்தல் நடத்த வேண்டும்.மைனாரிட்டியாக இருந்த போதும் 5 ஆண்டுகள் முழுமையாக திமுக ஆட்சி நடந்தது.

அதேபோல், மெர்சல் விவகாரத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon