மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

துறைமுக மேம்பாட்டுக்கு ஒப்புதல்!

துறைமுக மேம்பாட்டுக்கு ஒப்புதல்!

குஜராத்தின் குட்ச் பகுதியில் உள்ள கண்டலா துறைமுகம் ஸ்மார்ட் தொழில்துறை துறைமுக நகரை அமைப்பதற்கான ஒப்புதலைச் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து பெற்றுள்ளது.

ரூ.1,176 கோடியில் இந்தத் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த ஸ்மார்ட் தொழில்துறை துறைமுக நகர் இரண்டு தனித்தனி தளங்களாக அமையவுள்ளது. அதில், காந்திதாமில் 35,700 குடியிருப்புகளும், பள்ளிகளும், பூங்காக்களும் அமையவுள்ளது. மேலும், இதில் 60,000ற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் குஜராத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இரண்டு தளங்களில் அமையவுள்ள இதில் அதிபூரில், தெற்கு தாகூர் சாலையில் 580 ஏக்கர் பரப்பளவில் ஒன்றும், காந்திகாமில் 850 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றும் அமையவுள்ளது. அமைக்கப்படுகின்ற இந்தக் கட்டடங்களின் அதிகபட்ச உயரம் 12 மீட்டராகும்.

மேலும் இவற்றில், தொழில்துறை பூங்காக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், சமூக மேம்பாட்டு மையங்கள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், லாஜிஸ்டிக் பூங்காக்கள் போன்றவையும் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் பணியாற்ற உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கப்படும். இந்நிறுவனம் அண்மையில் தீனதயாள் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய 12 துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும். மேற்கு கடற்கரைப் பகுதியில் மிக முக்கியமான துறைமுகம் இதுவாகும்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon