மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 10 டிச 2019

டைட்டானிக் பயணியின் கடிதம் ஏலம்!

டைட்டானிக் பயணியின் கடிதம் ஏலம்!

டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ரூ. 8 கோடிக்கு ஏலம் விடப்பட உள்ளது.

1912ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகப் பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டு சென்றபோது வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது.

இதில் பயணம் செய்த 1500க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர். இவர் தனது தாய்க்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் எடுத்து வைத்துள்ளார்.பின்னர் அது பலரிடம் கை மாறி வந்த நிலையில் தற்போது இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது.

இக்கடிதத்தை 80 ஆயிரம் பவுண்டுக்கு அதாவது இந்திய மதிப்பீட்டின் படி சுமார் ரூ.8 கோடிக்கு ஏலம் விட ஏல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு பயணிகள் குறித்தும் ஹோல்வர்சன் எழுதியுள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon