மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

ஹாட்ரிக் பட்டத்தை நோக்கி ஸ்ரீகாந்த்

ஹாட்ரிக் பட்டத்தை நோக்கி ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓப்பன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹாங்காங்கின் விங் கீ வின்சென்டை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் தந்தார். சாய்னா நேவால், பிரனாய் காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறினர். இந்நிலையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், காலிறுதியில் உலக சாம்பியன் விக்டோர் ஆக்சல்சானை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.

நேற்று இரவு (அக்டோபர் 21) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வாங்க் விங் கீ வின்சென்டை எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் 21-18, 21-17 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த். இந்தப் போட்டி 39 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது.

25 வயதாகும் ஸ்ரீகாந்த், இந்த ஆண்டில் இந்தோனேசியா ஓப்பன் மற்றும் ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டங்களை வென்று தற்போது மூன்றாவது பட்டத்தை வெல்வதற்குத் தயாராக உள்ளார்.

இதன் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கொரியாவைச் சேர்ந்த லீ ஹூன், 25-23, 18-21, 21-17 என்ற கணக்கில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் சான் வான் ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்-ஹூன் மோதவுள்ளனர்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon