மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

தமிழகத்தின் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான்!

 தமிழகத்தின் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான்!

தமிழகத்தின் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான்!

தமிழகத்தில் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான் என்று, தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று, பாஜகவினர் பேசிவரும் நிலையில், தான் இணையத்தில்தான் திரைப்படத்தை பார்த்தேன் என்று புதிய தலைமுறை விவாத நிகழ்வில் ஹெச்.ராஜா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தஞ்சையில் இன்று ( அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்,"ஒரு காலத்தில் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல் போன்றவை திராவிட இயக்கத்திற்கு புத்துணர்ச்சி அளித்தது. இதே போல் கலைஞரின் பராசக்தி, திரும்பிப்பார் போன்ற படங்கள் தமிழகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை எதிர்த்து ஹெச்.ராஜா பேசி வருவது கண்டனத்திற்குரியது. இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் அதற்குள் வந்துவிட்டதா என்பது கூட இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் எச்.ராஜா, இணையதளம் வாயிலாக 'மெர்சல்' திரைப்படத்தை பார்த்திருக்கிறேன் என்று பகிரங்கமாக சொல்கிறார், எனவே அவர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர் எச்.ராஜா. சாரணர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டு 40 ஓட்டுகள் வாங்குகிறார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்கு பெற்றவராக இருக்க வேண்டும். மெர்சல் படத்துக்கு நல்ல விளம்பரம் தேடித்தந்ததால் ஹெச்.ராஜாவுக்கு நடிகர் விஜய் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்"என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon